Menu

பாக்.மற்றும் இந்தியாவுக்கிடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி.. மெகபூபா குற்றச்சாட்டு.!!!

பாக்கிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கிடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி செய்வதாக ஜம்மு காஷ்மீரில் மாநிலத்தின் முhலமைச்சர் மெக பூபா குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகள் நேற்று முன்தினம் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்விடையம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதேஜம்மு காஷ்மீரில் மாநிலத்தின் முhலமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் போர் நிறுத்த ஒப்பந்தமானது ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு மிகப்பெரும் நிம்மதி கொடுத்துள்ளதாக தெரிவித்த ஜம்மு காஷ்மீரில் மாநிலத்தின் முhலமைச்சர்
ஆனால் தீவிரவாதிகள் தங்கள் வன்முறைகளைத் தொடர்ந்த வண்ணம் உள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனவே தீவிரவாதிகளில் nகுறித்த செயற்பாடானது போர் நிறுத்த நடைமுறைகளை சீர்குலைக்கும் முயற்சியாகவே உள்ளதாகவும் ஜம்மு காஷ்மீரில் மாநிலத்தின் முhலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புனித ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவித்த மெகபூபா

எனினும் ரம்ஜான் மாத ஆரம்பத்தில்; இருந்தே காஷ்மீர் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதாகவும் கவலை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply