Menu

மக்களுக்காக என்ன செய்தீர்கள்.??? மாவையை ஓடவிட்ட போராட்டகாரர்கள்..!!!! காணொளி இணைப்பு!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்குப் பகுதியில் வெளிமாவட்ட மீனவர்கள் தங்கி நின்று கடலட்டை பிடிப்பதற்கு எதிராகவும், அவர்களை கைது செய்யுமாறு கோரியும் இன்று யாழில் மாபெரும் கண்டனப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கண்டனப் பேரணி ஆரம்பமாவதற்கு முன்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா யாழ்.கடற்தொழிலாளர் சம்மேளன வளாகத்திற்கு வருகைத்தந்திருந்தார்.

இந்த நிலையில் மாவை சேனாதிராஜாவை அங்கு கூடியிருந்த பெருமளவான இளைஞர்களும், மற்றும் மீனவர்களும் ஒன்றிணைந்து வெளியேறுமாறு கூச்சலிட்டமையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போரட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்
இது மக்கள் போராட்டம், இங்கு அரசியல்வாதிகள் யாரும் வர வேண்டாம் என்பதுடன், மாவை சேனாதிராஜாவை கடுமையாக திட்டியதால் அமைதியின்மை ஏற்பட்டது.

அத்துடன் நீங்கள் அரசாங்கத்துடன் இணைந்து இதுவரை எங்களுக்குப் பெற்றுத் தந்தது என்ன என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாவை சேனாதிராசாவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது மக்கள் போராட்டம் என்றும் அரசியலுக்கு இங்கு இடமில்லை, மண்ணெண்ணெய் விலையேற்றத்திற்கு நடவடிக்கை எடுக்காமல் நீங்கள் அரசியல் வாதிகளாக இருந்து என்ன பயன்? எனக் கடுமையாகக் கூச்சலிட்டுள்ளனர்.

இந்த நிலையில் மாவை சேனாதிராஜாவும், அவரது குழுவினரும் அங்கிருந்து உடனடியாக வெளியேறி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Right Menu Icon