Menu

இரண்டு துருவங்களும் சிங்கப்பூரில் கால் பதித்துள்ளன.!!

அமெரிக்காவுடனான பேச்சு வார்த்தையில் கலந்து கொள்வதற்காக வடகொரிய ஜனாதிபதி கிம்யொங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனாள்ட் டிரம்ப் ஆகியோர் நேற்று சிங்கப்பூரை சென்றடைந்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம்யொங் உன்னுக்குமிடையிலான சந்திப்பு நாளை 12ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந் நிலையில் இன்று சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வடகொரிய ஜனாதிபதிக்கு சிங்கப்பூர் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றுள்ளார்.

அத்துடன் கனடாவின் கியூபெக் நகரில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள ட்ரம்ப், அங்கிருந்து நேரடியாக இன்று மாலை சிங்கப்பூர் வந்தடைந்துள்ளார்.

எதிர்வரும் 12ம் திகதி சிங்கப்பூரின் சென்டெசா தீவில் உள்ள கப்பெலா விடுதியில் உத்தியோகவூர்வமாக சந்தித்து கலந்துரையாடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சந்திப்பு தொடர்பான செய்திகளை சேகரிக்க உலகம் முழுவதிலும் இருந்து மூவாயிரத்துக்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் சிங்கப்பூருக்கு சென்றுள்ள நிலையில் ஒழுங்கு முறைகளை மீறியமைக்காக தென்கொரியாவை சேர்ந்த 2 செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

U.S. President Donald Trump waves next to Singapore’s Foreign Minister Vivian Balakrishnan after arriving in Singapore June 10, 2018. REUTERS/Jonathan Ernst

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon