Menu

அதிகமான விக்கெட்டுக்களை கைப்பற்றியவர்களின் பட்டியலில் ரங்கன ஹேரத் முன்னேற்றம்.!!!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிகமான விக்கெட்டுக்களை கைப்பற்றியவர்களின் பட்டியலில்இ இலங்கையின் சுழல் பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத் 11வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

 

இலங்கை பந்துவீச்சாளரான ரங்கன ஹேரத், டேஸ்ட் போட்டிகளில் 418 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் இங்கிலாந்து வீரர் ப்ரோட் ஆகியோரின் சாதனையையும் முறியடித்துள்ளார்.

 

அத்துடன் தரவரிசை பட்டியலில் 11 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

 

தற்போது நடைபெற்றுவரும் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம் 11 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

இதேவேளை அதிகமான விக்கெட்டுக்களை கைப்பற்றியவர்களின் பட்டியலில் இலங்கையின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

 

அத்துடன் 708 விக்கெட்டுகளுடன் வோர்னே 2 ஆவது இடத்திலும்,
619 விக்கெட்டுகளுடன் கும்ளே மூன்றாவது இடத்திலும் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நாளையதினம் மகிந்த பாராளுமன்றில் விசேட உரை

நாளையதினம் பாராளுமன்றில் பிரதமர் மகிந்த...

Leave a Reply

Right Menu Icon