Menu

முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தேல்வி!!!

இலங்கைக்கு எதிராக மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 226 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியுள்ளது.

 

கடந்த 6 ஆம் திகதி போர்ட் ஒவ் ஸ்பெயினில் ஆரம்பமானது. இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகளின் அணித் தலைவர் ஜேசன் ஹோல்டர் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 154 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 414 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

 

டாவ்ரிச் 125 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கமல் இருந்தார். இலங்கை அணி தரப்பில் லஹிரு குமார 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். சுரங்க லக்மால் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்த இலங்கை அணி 55.4 ஓவர்களில் 185 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்க ளையும் இழந்தது.

 

தொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகள் அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது.

 

அத்துடன் 72 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 223 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டத்தை நிறுத்திக் கொள்வதாக மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவித்தது.

 

இதன் மூலம் இலங்கை அணி வெற்றி பெற 453 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

 

இலங்கை அணி நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 176 ஓட்டங்களை எடுத்திருந்தது. குசல் மெண்டிஸ் 94 ஓட்டங்களுடன் சிறப்பாக துடுப்பெடுத்தாடினால்.

 

இந் நிலையில் நேற்றைய ஐந்தாம் நாள் ஆட்டம் ஆரம்பமான சிறிது நேரத்தில் குசல் மெண்டிஸ் சதம் அடித்ததுடன்
102 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அதன் பின் வந்த ஏனயை இலங்கை வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

 

இதனால் இலங்கை அணி 83.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 226 ஓட்டங்களை எடுத்தது.
மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ரோஸ்டன் சேஸ் 4 விக்கெட்டுக்களையும், தேவேந்திர பி 3 விக்கெட்டுக்களையும் ஷானோன் காபிரியல் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

 

இந்நிலையில் 226 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றது.
ஆட்ட நாயகனான ஷேன் டாவ்ரிச் தேர்வு செய்யப்பட்டார்.

 

இரு அணிகளுக்குமான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஆளும் கட்சியின் தெரிவுக் குழுவுக்கு எழுவர் நியமனம்

ஆளும் கட்சியின் தெரிவுக் குழுவுக்கு ஏழு...

Leave a Reply

Right Menu Icon