Menu

வடமராட்சி கிழக்கு மீனவர்களுக்கு உடனடியாக தீர்வை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை..!!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் தென்னிலங்கை மீனவர்களது செயற்பாடுகளை உடனடியாக தீர்வை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்தள்ளார்.

இன்று அமைச்சரவையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் தென்னிலங்கை மீனவர்களது செயற்பாடுகள் தொடர்பில், வடக்கு மாகாண மீனவர்கள் வெளியிட்டுள்ள எதிர்ப்பு தொடர்பாக இன்று அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தென்னிலங்கை மீனவர்களது செயற்பாடுகள் தொடர்பான பிரச்சினை நல்லிணக்கத்துக்கும், மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் அமையும் என்று அமைச்சரவையில், அமைச்சர் மனோ கணேசனினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் போது வடக்கு மாகாண மீனவ சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்குமாறு, ஜனாதிபதி அமைச்சர்களான மனோகணேசனுக்கும், விஜித் விஜயமுனி சொய்சா ஆகியோருக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon