Menu

இந்து விவகார பிரதி அமைச்சுப் பதவி காதர் மஸ்தானுக்கு வழங்கிய நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக குவியும் கண்டனங்கள்..!!!

இந்து விவகார பிரதி அமைச்சுப் பதவியினை காதர் மஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ளமையானது நாட்டின் அனைத்து இந்துக்களையும் கேவலப்படுத்தும் செயல் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீகொத்தாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே வடிவேல் சுரேஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த 7 பேருக்கு இன்று பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகள் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, காதர் மஸ்தானுக்கு வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றம், இந்து விவகார பிரதி அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முஸ்லிம் இனத்தவருக்கு எவ்வாறு, இந்து விவகார பிரதி அமைச்சுப் பதவியை வழங்கமுடியும் என்றும்
நல்லாட்சி அரசாங்கத்தில் குறித்த அமைச்சுப்பதவியை வழங்குவதற்கு இந்துக்கள் எவரும் இல்லையா? என வடிவேல் சுரேஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த வடிவேல் சுரேஸ் இல்லாவிடில் நாட்டிலுள்ள அனைத்து இந்துக்களின் எதிர்ப்பையும் சந்திக்க வேண்டி வரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a Reply

Right Menu Icon