Menu

ரட்ணப்பிரிய பந்துவை மீண்டும் அதே இடத்திற்கு நியமிக்கவேண்டும்..!!!

முல்லைத்தீவு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கட்டளை தளபதியாக பணியாற்றிய நிலையில் அங்கிருந்து தற்போது இடமாற்றப்பட்டுள்ள ரட்ணப்பிரிய பந்துவை மீண்டும் அதே இடத்திற்கு நியமிக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல்வீரவன்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விமல் வீரவன்ச இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதை கருத்தில் கொண்டு ரட்ணப்பிரிய பந்துவை மீண்டும் முன்னைய பதவிக்கே நியமிக்கவேண்டும் என்றும் விமல் வீரவன்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமீபத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கட்டளை தளபதியான ரட்ணப்பிரிய பந்துவிற்கு முல்லைத்தீவு மக்கள் உணர்வுபூர்வமான பிரியாவிடை வழங்கிய புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon