Menu

கனடாவில் பசுபிக் நாடுகளின் கூட்டாட்சியினை உறுதிப்படுத்துவதற்கான சட்டமூலம் அறிமுகம் !!

பசுபிக் நாடுகளுக்கிடையில் விரிவான மற்றும் முற்போக்கு கூட்டாட்சியினை உறுதிப்படுத்துவதற்கான சட்டமூலம் சில நாட்களில் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நேற்றையதினம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே கனேடிய அரசாங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் அமெரிக்கா தவிர்ந்த 11 நாடுகள் பிரதான வர்த்தக உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த ஒப்பந்தமானது அமுலுக்கு வரும் பட்சத்தில் பாராளுமன்றத்தில் சமப்பிக்கப்படவுள்ள சட்டமூலத்தின் மூலம் சாதகமான வழிகளை பெறலாம் என்றும் கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

கனடா, அவுஸ்ரேலியா, புருனே, சிலி, ஜப்பான், மலேசியா, மெக்ஸிக்கோ, நியூசிலாந்து, பெரு, சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் ‘பசுபிக் நாடுகளுக்கு இடையில்

விரிவான மற்றும் முற்போக்கான கூட்டாட்சியினை நடைமுறைப்படுத்தும் சட்டம்’ வரையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon