Menu

ஜம்மு காஷ்மீரில் தேடுதல் நடவடிக்கையின் போது இரண்டு 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.!!!

இந்திய மாநிலமான ஜம்மு காஷ்மீரில் தேடுதல் நடவடிக்கையின் போது இரண்டு 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு – காஷ்மீரில் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புல்வாமா பகுதியில் உள்ள காங்கூ என்ற இடத்தில், மத்திய ரிசர்வ் படையினரைக் குறிவைத்தே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்திய பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள பனர் வனப் பகுதியில், தேடுதல் நடவடிக்கையின்; போது தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதன் போது இந்திய ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon