Menu

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் 14 தமிழர்களுக்கு நாட்டிற்குள் நுழைய தடை!!!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் 14 பேருக்கு நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் 14 தமிழர்களின் பெயர் பட்டியலை சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பாதுகாப்பு அமைச்சு நேற்று வெளியிட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சு வெளியிடப்பட்ட பட்டியலில் 86 பேர் இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது மேலதிகமாக 14 தமிழர்களும் இன்று இணைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் ஒழுங்கு விதிகள் சட்டத்தின் 47 ஆம் பிரிவின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு உள்ளிட்ட 8 அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon