Menu

கனடாவில் எல்லை தாண்டிய பெண்ணுக்கு விளக்கமறியல் தாயார் சென்றும் விட மறுப்பு..!!!

கனடா எல்லையை தாண்டி அமெரிக்காவிற்குள் தவறுதலாக சென்ற பிரான்ஸ் நாட்டு பெண்னெருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 19 வயதுடைய பெண், கனடாவில் வசித்து வரும் தாயை சந்திப்பதற்காக சென்றிருந்த வேளையிலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காலையில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண் தவறுதலாக அமெரிக்க எல்லையான வொஷிங்டன் பகுதிக்குள் சென்றுள்ளார்.

இதனை அவதானித்த எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த பெண் கைது செய்யப்படும் போது அவரது தயார் அங்கு இல்லை எனவும், இதனால் மொழி தெரியாத பெண் காவல் மையத்தின் மூலம் தாயிடம் தெரியப்படுத்தியுள்ளார்.

இதனை அடுத்து அவரது தாய், கடவுச்சீட்டு உட்பட அனைத்து அடையாள ஆவணங்களையும் வழங்கிய போதும், அமெரிக்க எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் மகளை விடுவிக்க மறுத்து விட்டனர்.

அத்துடன் அதிகாரப்பூர்வ நுழைவிடம் அல்லாத பாதையால் அமெரிக்க எல்லைக்குள் நுழைபவர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படுவார்கள் என அமெரிக்க சுங்கத்துறை மற்றும் எல்லை பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon