Menu

ரொறன்ரோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.!!

ரொறன்ரோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரொறன்ரோவின் மிட்டவுன் பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விதத்திலேயே குறித்த நபர் படுகாயமடைந்துள்ளனர்.

நபர் வீதியை கடக்க முற்பட்ட போது, கார் ஒன்று மோதியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் பின்னர் அப்பகுதி மக்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இந்நிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்த போது இதய துடிப்பின்றி, காருக்கு அடியில் இருந்த நபரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

அத்துடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை ரொறன்ரோ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon