Menu

ரொறன்ரோவில் மட்டுமின்றி கனடாவின் ஏனைய பகுதிகளிலும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 70 பேர் கைது.!!

ரொறன்ரோவில் மட்டுமின்றி கனடாவின் ஏனைய பகுதிகளிலும், அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்தியங்களிலும் சர்வதேச அளவிலான தொடர்புகளைக் கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 70 பேரை ரொறன்ரோ பொலிஸார் கைது செய்துள்ளனனர்.

ரொறன்ரோ, டூர்ஹாம், யோர்க் மற்றும் பீல் பிராந்தியங்களில் 800 பொலிஸ் அதிகாரிகள் களத்தில் இறக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்ட 50 இற்க்கும் அதிகமான சுற்றிவளைப்புத் தேடுதல்களின் போது, பெருமளவு துப்பாக்கிகள், போதைப் பொருட்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

ஒன்பது மாதங்களின் முன்னர் ஆரம்பிக்கப்பட்ட விசாரணையின் தொடர்ச்சியாகவே இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிஸ் தலைமை அதிகாரி மார்க் சௌண்டர்ஸ், குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது ‘ஃபைவ் பொயின்ட் ஜெனரல்ஸ்’ எனப்படும் குழுவுடன் தொடர்புடைய பெருமளவானோர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ரொறன்ரொவில் இடம்பெற்றுள்ள பல்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் பின்னணியில் இந்தக் குழு இருந்துள்ளதாகவும் ரொறன்ரோ பொலிஸ் தலைமை அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக ரொறன்ரோவின் மேற்கு பகுதியில், வெஸ்டன் வீதி மற்றும் லோறன்ஸ் அவனியூ பகுதியில் இந்தக் குழுவினரின் செயற்பாடுகள் அதிக அளவில் காணப்பட்டதாகவும் மார்க் சௌண்டர்ஸ், குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon