Menu

ஜக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் காணாமல் ஆக்கப்பட்டடோர் சங்கங்களின் தலைவிகள் பிரசன்னம்..!!!

வடக்கு மற்றும் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நீதி கோரி தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் வடக்கு கிழக்கு மாவட்டங்களை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களின் சங்கத்தின் தலைவிகள் ஜக்கியநாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவின் 38 ஆவது

கூட்டத்தொடருக்கு சென்று சந்திப்புக்களை மேற்கொண்டு தங்கள் பிரச்சனைகளை உலக நாடுகளுக்கும் பல நாடுகளில் உள்ள மனிதநேய அமைப்புக்களுக்கும் தெரிவித்துள்ளனர்.

 

 

அத்துடன் எதிர்வரும் 01.07.2018ம் திகதி அன்று சுவிஸில் வாழும் புலம்பெயர்ந்த உறுவுகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜ.நா முன்றலில் காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் பிள்ளைகள்,கணவன்மார்களின் படத்துடன் ஜ.நா சபையிடம் நீதி கோரி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply

Right Menu Icon