Menu

அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ வட கொரியா விஜயம்

அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ ஜூலை 5 ஆம் திகதி வடகொரிய ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஆகியோரது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு கடந்த மாதம் சிங்கப்பூரில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில், அணு ஆயுத ஒழிப்பு, பொருளாதார தடைகளை நீக்குதல் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருந்தன.

அத்துடன், வட கொரியாவில் செயற்பட்டிருந்த அணு சோதனை மையங்களை கிம் ஜாங் உன் மூடியிருந்தார்.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ நாளை மறுநாள் வடகொரியாவிற்கு விஜயம் செய்து கிம் ஜாங் உன்னை சந்திக்கவுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுடன் போட்ட ஒப்பந்தம் குறித்தும், அணு சோதனை மையங்களை அழிப்பது தொடர்பாகவும் பேசுவதற்காக அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ விஜயம் செய்யவுள்ளதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளும் கட்சியின் தெரிவுக் குழுவுக்கு எழுவர் நியமனம்

ஆளும் கட்சியின் தெரிவுக் குழுவுக்கு ஏழு...

Leave a Reply

Right Menu Icon