Menu

விஜயகலாவுக்கும் மகிந்தவுக்கும் இடையில் இரகசிய டீல்?

விடுதலை புலிகள் அமைப்பு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நேற்று வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் சிங்கள கடும் போக்குவாதிகள் கடும் கண்டத்த வெளியிட்டு வருகின்றனர்

 

வடக்கு கிழக்கில் தமிழீழ விடுதலை புலிகள் மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும் எனவும் விடுதலை புலிகள் இருந்த காலத்தில் அதிக சுதந்திரமாக வாழ முடிந்ததாக அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

 

அமைச்சரின் இந்த கருத்து தொடர்பில் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்த சுகந்த தேரர் தெரிவித்துள்ளார்.

 

அடுத்து யார் ஆட்சியை பிடிப்பது என்ற போட்டி ஐ. தே. கட்சிக்கும் மகிந்த அணியினருக்கும் போட்டி நிலவி வரும் நிலையில் தமிழர் தரப்பின் புலிகள் சாhந்த கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்ற போது அது மகிந்தவுக்கும் கடும் சிங்கள போக்கு பேரினவாதிகளுக்கும் வாய்ப்பாக போய்விடும் என தென்னிலங்கை அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

 

தமிழீழ விடுதலை புலிகளின் மீளுருவாக்கம் தொடர்பில் யாரேனும் தமிழர் தரப்பு கருத்துக்களை வெளியிட்டால் அது மகிந்தவை மேலும் பலப்படுத்தும் என்ற விடயம் அரசியல் அறிவற்றவர்களுக்கே இருக்கின்ற போது அமைச்சர் விஜயகலாவுக்கு தெரியாத விடயம்ல்லவென தென்னிலங்கை அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

 

அமைச்சர் விஜயகலா மகிந்தவின் கையை பலப்படுத்தும் நோக்கிலேயே அவருடன் இவ்வாறு இரகசிய உடன்படிக்கையொன்றினை செய்து கொண்டு புலிகளின் மீளுருவாக்கம் தொடர்பிலான கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என தென்னிலங்கை அரசியல் விமர்சகர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்

‘பெரியார் குத்து’ பாட்டுக்கு நடனம் ஆடிய சிம்பு !!

நடிகர் சிம்பு சிறந்த நடிகர் மட்டுமின்றி...

Leave a Reply