Menu

அக்கராய மன்னனின் உருவச்சிலை இன்று கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அக்கராயன் பகுதியில் அமைந்துள்ள நான்கு பிரதான வீதிகளை இணைக்கும் சந்தியில் குறித்த சிலை திறந்து வைக்கப்பட்டது.

இந்த உருவச்சிலையை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா திறந்து வைத்தார்.

தமிழர் பாரம்பரிய முறைப்படி பறை இசை மற்றும் தமிழ் பண்பாட்டு வாத்தியங்களுடன் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

13 ஆம் நூற்றாண்டில் பொலனறுவை இராசதானிக்குப் பின்னர் வன்னி பிரதேசம் தமிழ் அரசர்களால் ஆளப்பட்டு வந்தது.

இதன் போது ஆட்சி செய்த அரசர்களில் ஒருவரே அக்கராய மன்னன் ஆவார்

அக்கராய மன்னனின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த இப்பிரதேசம் அக்கராயன் என இன்றும் அழைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

‘பெரியார் குத்து’ பாட்டுக்கு நடனம் ஆடிய சிம்பு !!

நடிகர் சிம்பு சிறந்த நடிகர் மட்டுமின்றி...

Leave a Reply