Menu

கரும்புலிகளின் தினத்தினை அனுஷ்டிக்கும் அளவிற்கு நாட்டின் சட்டம் ஒழுங்கு பாழடைந்து விட்டது என்கிறார்.!!

வடக்கு மாகாணத்தில் சட்டத்தை நிலை நாட்டுவதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய உறுதியளித்துள்ளார்.

வடக்கில் பகிரங்கமாக கரும்புலிகளின் தினத்தினை அனுஷ்டிக்கும் அளவிற்கு நாட்டின் சட்டம் ஒழுங்கு படுமோசமாக உள்ளதாகவும்
இவ்வாறு வடக்கு மாகாணத்தின் நிலைமை கடுமையாக மோசமடைந்து வருகின்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து, நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பி உரையாற்றும் போதே விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடக்கில் நேற்றையதினம் பகிரங்கமாக கரும்புலிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டதாகவும் இதில் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் பங்குபற்றியிருந்ததாகவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் யாழ்ப்பாணத்தில் இராஜாங்க அமைச்சர் விடுதலை புலிகள் மீண்டும் உருவாக்க வேண்டும் என கூறுகியுள்ளதாகவும் விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் அங்குள்ள இராணுவத்தினரால், அல்லது பொலிஸாரினால் எவ்வித சட்ட நடவடிக்கைகளையும் எடுக்க முடியவில்லை என தெரிவித்த விமல் வீரவன்ச
எனவே, இந்த விடயம் தொடர்பில் அரசு என்ன நடவடிக்கை எடுக்கபோகின்றது என விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் வழங்கியுள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய

வடக்கின் பாதுகாப்பு தொடர்பில் பிரதமர் கருத்துக் கூறுவார் என்றும் அங்கு சட்டம் நிலைநாட்டப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon