Menu

உண்மையான ஜந்து அமைச்சர்களும் யார்? வடக்கு மாகாண ஆளுநர் கேள்வி..!!!

வடக்கு மாகாண சபையின் ஐந்து அமைச்சர்கள் யார் என்பதை தமக்கு அறிவிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநரினால், இது குறித்த உத்தியோகபூர்வ அறிவுறுத்தல் இன்று முதலமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஆளுநர் அலுவலக தெரிவித்தள்ளது.

இதற்கமைய, வடக்கு மாகாண அமைச்சர்கள் தொடர்பான விபரம், முதலமைச்சரினால் ஆளுநருக்கு விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அமைச்சர்கள் மீதான ஊழல் குற்ற விசாரணை அடிப்படையில் பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்த பா.டெனீஸ்வரனுக்கு மீண்டும் அந்த அமைச்சுப் பதவியை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 29ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில் தற்போது வடக்கு மாகாண சபையின் அமைச்சராக பா.டெனீஸ்வரன் செயற்படுகிறார்.

மாகாண சபை ஒன்றுக்கு முதலமைச்சருடன் சேர்த்து, 5 அமைச்சர்களே பதவி வகிக்க முடியும் என்றபோதும், தற்போது வடக்கு மாகாண சபையில் ஆறு அமைச்சர்கள் அங்கம் வகிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் இன்று ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போது
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், பா.டெனீஸ்வரன் அமைச்சராக செயற்படுகின்றமை சரியானதே எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தற்போது ஆறு அமைச்சர்கள் இருக்கின்றைமையானது குழப்பான சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாக தெரிவித்த சீ.வி.கே. சிவஞானம்
இது தொடர்பில் ஆளுநர் அலுவலகமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply