Menu

தமிழகத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் உள்ளதாம் பொன்.ராதாவின் புதிய கண்டுபிடிப்பு.!!

தமிழகத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் உள்ளதாக மத்திய இணை அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சுமத்தியுள்ளார்.

சென்னையில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே பொன்.ராதாகிருஷ்ணன் இவ்வாறு தெரிவித்தள்ளார்.

தமிழ்நாடு தூத்துக்குடியில் பயங்கரவாதிகள் தங்களை மூளைச்சலவை செய்ததாக மக்கள் தெரிவித்தள்ளதாக பொன்.ராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இங்குள்ள தி.மு.க. உள்ளிட்ட கட்சி தலைவர்களின் மூளைகள் எங்கே சென்று விட்து என கேள்வி எழுப்பிய பொன்.ராதாகிருஷ்ணன் மக்களுக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன் தமிழ்நாட்டில் உள்ள பயங்கரவாதிகளுக்கு சமூக விரோதிகள் என்ற கவுரவம் வேண்டாம் என தெரிவித்த பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தான் வெளிப்படையாகவே சொல்லி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள பயங்கரவாதிகள் ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சுமத்தியுள்ளார்.

Leave a Reply