Menu

கோட்டாபாயவுக்கு எதிராக ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு.!!!

முன்னாள் பாதுகாப்பு செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனது தந்தையை வெள்ளை வானில் கடத்திச் சென்றதாக தெரிவித்து பிரான்சிலுள்ள 17 வயதுடைய இளைஞனே இவ்வாறு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

அத்துடன் தனக்கு 8 வயதாக இருக்கும் போது அதாவது கடந்த 2008 ஆம் ஆண்டு கொழும்பு கருவாத்தோட்ட பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த வாகனமொன்று தமது வாகனத்தை நிறுத்தி, தந்தையைக் கடத்திச் சென்றதாகவும் அவ்விளைஞன் முறைப்பாடு செய்துள்ளார்.

இதேவேளை கடந்த மே மாதம் நடைபெற்ற ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் ஜெயனி தியாகராஜா எனும் யுவதியொருவர் தனது சகோதரரின் கடத்தல் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு எதிராக முறைப்பாடொன்றை செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஆளும் கட்சியின் தெரிவுக் குழுவுக்கு எழுவர் நியமனம்

ஆளும் கட்சியின் தெரிவுக் குழுவுக்கு ஏழு...

Leave a Reply

Right Menu Icon