Menu

ஹாலிவுட் கவர்ச்சிக் கன்னி மர்லின் மன்றோவின் ரகசிய வாழ்க்கை நாளை முதல் ஒளிபரப்பு!!

மறைந்த ஹாலிவுட் கவர்ச்சிக் கன்னி மர்லின் மன்றோவின் ரகசிய வாழ்க்கை பற்றிய குறுந்தொடர் நாளை முதல் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிறது.

1947-ஆம் ஆண்டு ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய மர்லின் மன்றோ, தொடர்ந்து பல படங்களில் தனது அபார நடிப்புத் திறமையாலும், அழகாலும் ரசிகர்களை கவர்ந்தவர். நகைச்சுவை பாத்திரங்களில் இவரது நடிப்பு பெரிதும் வரவேற்கப்பட்டது.

கோல்டன் குளோப் விருது மற்றும் அனைத்து காலப்பகுதிக்குமான சிறந்த நடிகை என அமெரிக்க திரைப்படக் கழகத்தினால் பாராட்டும் பெற்றவர். நடிகையாக மட்டுமின்றி பாடகி, இயக்குனர் என பல்வேறு முகங்களும் இவருக்கு உண்டு.

தன்னுடைய கடைசி நாட்களில் போதைக்கு அடிமையான இவர், 1962-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். போதைப் பொருள் அதிகம் உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என்று அறிவிக்கப்பட்டாலும், கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில், கவர்ச்சி கன்னி மர்லின் மன்றோவின் ரகசிய வாழ்க்கை பற்றிய குறுந்தொடர் நாளை முதல் ’ஹிஸ்ட்டரி டிவி18’ என்ற தனியார் தொலைக்காட்சியில் தொடர்நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிறது.

பத்திரிகைகள், செய்தியாளர்களிடம் இருந்து தனது அந்தரங்க வாழக்கையை மர்லின் மன்றோ எவ்வாறு மறைத்து வாழ்ந்தார்? அவரது வாழ்க்கையில் மையம் கொண்டிருந்த பிரபலஸ்தர்கள் யார்? என்னும் ரகசியங்களை இந்த தொடர் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

திறன் இந்தியா திட்டத்தின் தூதர்களாக பாலிவுட் பிரபலங்கள்

'திறன் இந்தியா' திட்டத்தின் துாதர்களாக...

Leave a Reply

Right Menu Icon