Menu

வடக்கில் சட்டத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

வடக்கில் பகிரங்கமாக கரும்புலி தினம் அனுஷ்டிக்கும் அளவிற்கு நாட்டின் சட்டம் ஒழுங்கு படுமோசமாக உள்ளது என்றும், வடக்கு மாகாணத்தின் நிலைமை கடுமையாக மோசமடைந்து வருகின்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார்.

சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து, நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய விமல் வீரவங்ச, வடக்கில் நேற்று பகிரங்கமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள் தினத்தில், ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் பங்குபற்றியிருந்ததை சுட்டிக்காட்டினார்.

அத்துடன், யாழில் இராஜாங்க அமைச்சர் விடுதலை புலிகள் மீண்டும் உருவாக்க வேண்டும் என்று தெரிவித்ததையும் சுட்டிக்காட்டியு விமல் வீரவங்ச, வடக்கில், உள்ள இராணுவம் மற்றும், பொலிஸாரால் எவ்வித சட்ட நடவடிக்கைகளையும் எடுக்க முடியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இந்த விடயம் தொடர்பில் அரசு என்ன நடவடிக்கை எடுக்கபோகின்றது என இதன் போது விமல் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர், ‘வடக்கின் பாதுகாப்பு தொடர்பில் பிரதமர் கருத்துக் கூறுவார், அங்கு சட்டம் நிலைநாட்டப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon