Menu

விஜயகாவிற்கு ஆதரவாக யாழில் சுவரொட்கள்

விடுதலைப்புலிகளின் மீள் எழுச்சி அவசியம் என தெரிவித்த கருத்திற்காக தென்னிலங்கையில், கடும் எதிர்ப்பை சந்தித்துள்ள விஜயகலா மகேஸ்வரனிற்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட சுவரொட்டிகளில், விஜயகலாவை தமிழ் தலைவி என வர்ணிக்கப்பட்டுள்ன

தமிழ் மக்களிற்காக மகேஸ்வரன் அன்று உயிர் துறந்தார் இன்று தமிழ்தலைவி விஜயகலா பதவி துறந்தார் போன்ற வாசகங்களையும் சுவரொட்டிகளில் காணமுடிகின்றது.

விஜயகலாவிற்கு ஆதரவான இந்த சுவரொட்டிகளை யாழ் பஸ் நிலையம் உட்பட யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் காணமுடிகின்றது.

கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பாக உரையாற்றியிருந்த நிலையில் தென்னிலங்கையில் அமைச்சருக்கெதிராக பல எதிர்ப்புகள் கிளம்பியிருந்த நிலையில் நேற்று மாலை விஜயகலா மகேஸ்வரன் தான் அமைச்சுப் பதவியிலிருந்து இராஜிநாமா செய்வதாக அறிவித்திருந்தார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எழுத்து மூலம் தனது இராஜினாமா கடிதத்தினை அனுப்பியிருந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் விஜயகலா மகேஸ்வரனுக்கு ஆதரவாக தமிழ்த்தலைவி என அவரை குறிப்பிட்டு குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Right Menu Icon