Menu

இலங்கையில் தமிழன் இன்றும் இரண்டாந்தரப் பிரஜையாகவே நடத்தப்படுகின்றான்..!!!

நாட்டில் தமிழர்கள் தொடர்ந்தும் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப்படுகின்ற நிலைமையே காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்து இரண்டாண்டுகள் முடிந்துள்ள நிலையில் தமிழர்கள் தொடர்ந்தும் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்துகின்ற நிலையே காணப்படுவதாக வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலமாகத் தன்மீது சில அரசியல்வாதிகள் அவதூறுக் குற்றச்சாட்டுக்களை மக்கள் மத்தியில் பரப்பி வருவது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே வியாழேந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் மக்கள் போராட்டங்களைப் புறந்தள்ளி இங்கு வருகின்ற அமைச்சர்களுக்கு பின்னால் செல்பவர்களே இவ்வாறான பொய்யான பரப்புரைகள் மக்கள் மத்தியில் பரப்புவதாக வியாழேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

நல்லாட்சிக்கு முண்டு கொடுத்து இரண்டாண்டுகள் முடிந்துள்ள நிலையில் தமிழர்களுக்கான எந்தவிதமான அங்கிகாரங்களையும் அரசாங்கம் வழங்கவில்லலை என்றும் வியாழேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களை அவர்களது சொந்த தாயக நிலத்திலேயே இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்துகின்ற நிலையில் தாம் அரசுக்கு ஆதரவு வழங்குவதை விடுத்து மக்களுக்காக சேவை செய்து வருவதாகவும் வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இதைப் பொறுத்துக் கொள்ளாத சில அரசியல்வாதிகள் தன் மீது சேறு பூசி, பொய்களைக் கூறி தன்னை ஓரங்கட்ட நினைப்பதாகவும் வியாழேந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon