Menu

கனடாவில் அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக 54 பேர் பலி..!!!!

கனடாவில் அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் கடுமையான வெப்ப நிலை நீடித்து வருகிற நிiலியில் மேற்குக் கடலோரப் பகுதி முழுவதும் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் மொண்ட்ரியல் நகரிலும் அதிக வெப்பம் காரணமாக பலர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க நீச்சல் குளங்களை கூடுதலான நேரம் வரை திறக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, மொண்ட்ரியல் நகரில் மட்டும் 28 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள சுகாதார துறை அமைச்சு இன்னும் சில தினங்களில் இயல்பு நிலை திரும்பி விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon