Menu

ஜப்பானில் வெள்ளம் 15 பேர் பலி…!!!!

கடந்த சில தினங்களாக ஜப்பானில் பெய்து வரும் கனமழை காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஜப்பானின் தென்மேற்கு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.

இதனால், ஒகயாமா, ஹிரோசிமா மற்றும் யமாகுச்சி போன்ற ஜப்பானின் முக்கிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால், வீதிகள் சேதமடைந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் 50-க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகியுள்ளதாகவும் மீட்புக்குழுவின்ர் தெரிவித்துள்ளனர்.

மேலும், காணாமல்போனவர்களை தேடும் பணிகளில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply