Menu

18 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியுள்ள கனேடிய பிரதமர்..!!!!

பெண் செய்தியாளரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ மன்னிப்பு கோரியுள்ளார்.

18 ஆண்டுகளுக்கு முன்னர் பெண் செய்தியாளர் ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தமை யாவரும் அறிந்ததே

இந்நிலையில் இவ்விடையம் தொடர்பாக நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவிலாளர்களின் சந்திப்பின்போதே ஜஸ்டின் ரூடோ பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார்.

கடந்த 2000 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில், கிரெஷ்டன் வேலே அட்வான்ஸ் பத்திரிக்கையின் பெண் நிருபரிடம், ஜஸ்டின் ரூடோ தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த வாரம், அரசியல் விமர்சகரான வாரன் கின்செல்லா, மீண்டும் இப்பிரச்சனை தொடர்பில் ரூடோவிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த பிரதமர், குறித்த தினம் சிறப்பான ஒன்றாகவே இருந்ததாகவும், தவறான சம்பவங்கள் எதுவும் அன்று நிகழ்ந்ததாக நினைவில் இல்லை எனவும் பதிலளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon