Menu

பாரதிய ஜனதா கட்சி விட்ட அம்பு அவர்களையே தைத்துள்ளது குஷ்பு அதிரடி..!!!

பாரதிய ஜனதா கட்சி ஆரம்பித்து வைத்த ஆபத்துக்களே தற்போது அவர்களை நோக்கி திரும்பியுள்ளதாக கொங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது இணையவழித் தாக்குதல் நடத்தப்படுவது குறித்து, நேற்றையதினம் ஊடகமொன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே குஷ்பு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எல்லோரையும் தாக்குவதற்காக ட்ரோல் ஆர்மியை உருவாக்கியதே பா.ஜ.க.தான் என தெரிவித்த குஷ்பு அவர்கள் செய்த தவறு அவர்களையே தாக்குவதாகவும் குறிப்பிட்டள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாக இந்தத் தாக்குதல் அதிகமாகியுள்ளதாக தெரிவித்த குஷ்பு பணம் கொடுத்தே இணையவழித் தாக்குதல்தாரிகள் உருவாக்கப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

அத்துடன் தமிழிசை சௌந்தர்ராஜனை குற்றம் சொல்லி ஒன்றும் ஆகப் போவதில்லை என தெரிவித்த குஷ்பு
ஆனால், அவரை தனிப்பட்ட முறையில் உருவத்தை வைத்து கேலி செய்வது சரியானதல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply