Menu

தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய காணாமற் போனோரின் உறவினர்கள்..!!!!

காணாமற் போனோரின் உறவினர்கள், யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் ஆலயம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டமொன்றை இன்று காலை ஆரம்பித்துள்ளனர்.

காணாமற் போனோரின் உறவினர்களின் வவுனியா மாவட்டச் சங்கத்தால் இன்று காலை 9 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்போராட்டம் மாலை நான்கு மணிவரை இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

காணாமல் போனோரின் உறவிவினர்கள் வவுனியாவில் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற சுழற்சிமுறை உண்ணாவிரத போராட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமையுடன் ஐநூறாவது நாளை எட்டவுள்ளதை முன்னிட்டே இன்று யாழில் உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இப்போராட்டத்தின் போது நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளுடன் 108 தேங்காய் உடைக்கப்பட்டுள்ளதுடன் தீச்சட்டி வழிபாடுகளும் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை காணாமற் போனோரின் உறவிறனர்கள் நல்லூரில் முன்னெடுத்து வருகின்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் போது தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon