Menu

நாளை ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூருக்கு விஜயம்..!!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் சிங்கப்பூருக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தள்ளது.

சிங்கப்பூரில் நடைபெற உள்ள 06 வது ´சர்வதேச நகரம்´ எனும் மாநாடு உள்ளிட்ட சில கருத்தரங்குகளில் கலந்து கொள்வதற்காக சிங்கப்பூர் செல்லவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் பிரதமர் உள்ளிட்ட நாட்டின் உயர்மட்ட உறுப்பினர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள சர்வதேச நகரம் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் ‘நகர அபிவிருத்தி மற்றும் சுற்றாடலை பாதுகாப்பும்’ என்ற தலைப்பில் பிரதமர் உரையாற்ற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பிரதமரின் இந்த விஜயத்தில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், சஜித் பிரேமதாச, மலிக் சமரவிக்ரம மற்றும் பிரதி அமைச்சர் அனோமா கமகே ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply