Menu

இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து கிரிக்கெட் அணி!!!

இங்கிலாந்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி தொடரை சமன் செய்துள்ளது.

இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி கார்டிஃபில் நேற்று நடைபெற்றது.

நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி; பந்து வீச்சை தெரிவு செய்தது.

இந்திய அணியின் சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர்.

இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 148 ஓட்டங்களை எடுத்தது.

இதையடுத்து, 149 ஓட்டங்களை இலக்காக கொண்டு இங்கிலந்து அணி களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் இறங்கினர்.

உமேஷ் யாதவ் தனது சிறப்பான பந்து வீச்சால் தொடக்க ஆட்டக்க்காரர்களை வெளியேற்றினார்.

இறுதியில் இங்கிலாந்து அணி 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 149 ஓட்டங்களை எடுத்தது.

இந்நிலையில் டி20 கிரிக்கெட் தொடரானது 1-1 என சமனிலையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon