Menu

பங்களாதேசுக்கு எதிரான டெஸ்ட்டில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி..!!!

முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஸ் அணியை 219 ஓட்ங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிபெற்றுள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஸ் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவருகின்றது.

இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கேபட்டி ஆண்டிகுவா நகரில் தொடங்கியது.

நாணயச்சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

பங்களாதேஸ் அணியானது மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவிச்சை சமாளிக்க முடியாமல் 43 ஓட்டங்களுடன் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதைத்தொடர்ந்து, மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது.

இறுதியில், மேற்கிந்திய தீவுகள் அணி 137.3 ஓவர்களில் 406 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

தொடர்ந்து, பங்களாதேஸ் அணியினர் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்தனர்.

முதல் இன்னிங்ஸ் போலவே விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தது.

இறுதியில், பங்களாதேஸ் அணி 40.2 ஓவர்களில் 144 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதையடுத்து, மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 219 ஓட்டங்கள்; வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஆசிய போட்டியில் தோனி டக் அவுட்! – டுவிட்டரில் விமர்சனம்

ஆசிய கோப்பை தொடரின் ஹாங் காங் அணிக்கு...

Leave a Reply

Right Menu Icon