Menu

கொழும்பில் துப்பாக்கி சுடு..!!! இருவர் உயிரிழப்பு.!!

கொழும்பு ஜம்பட்ட வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பெண் ஒருவர் உள்ளிட்ட இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்த சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். சம்பவத்திற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.

இதேவேளை, துப்பாக்கிச் சூடு மேற்கொண்டவர்கள் தொடர்பான தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாளையதினம் மகிந்த பாராளுமன்றில் விசேட உரை

நாளையதினம் பாராளுமன்றில் பிரதமர் மகிந்த...

Leave a Reply

Right Menu Icon