Menu

தமிழ்நாட்டில் நீட் தேர்வு..!! மத்திய அரசின் கையில் !!! கைவிரித்த அதிமுக..!!!!

தமிழ்நாட்டில் நீட் தேர்வில் எந்ததொரு சீர்த்திருத்ததை கொண்டு வந்தாலும் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள போவதில்லை என துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

கரூரில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே தம்பிதுரை இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வினை நடத்துவது தொடர்பாக மத்திய அரசாங்கம் எந்த சீர்த்திருத்தங்களை கொண்டு வந்தாலும் அதற்கு ஒருபோதும் தாம் உடன்படமாட்டோம் என்றும் தம்பிதுரை சுட்டிக்காட்டியுள்ளார்.

நீட் தேர்வு என்ற ஒன்றே தமிழ்நாட்டிற்கு தேவையில்லையென்பது அதிமுக வின் நிலைப்பாடு என தெரிவித்த தம்பிதுரை இந்த முடிவு வெற்றியளிப்பதும் தோல்வியடைவதும் மத்திய அரசின் கையில்தான் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக நீட் தேர்வு விடயத்தில் மாணவர்களை திசை திருப்பும் நடவடிக்கையினை ஒருபோதும் முன்னெடுக்கமாட்டோம் என தெரிவித்த தம்பிதுரை  ஆனால் நீட் தேர்வை இல்லாமல் செய்வது தொடர்பில் எம்மால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

திறன் இந்தியா திட்டத்தின் தூதர்களாக பாலிவுட் பிரபலங்கள்

'திறன் இந்தியா' திட்டத்தின் துாதர்களாக...

Leave a Reply

Right Menu Icon