Menu

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் சிமோனா ஹாலெப் அதிர்ச்சி தோல்வி..!!!

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப் மூன்றாவது சுற்றில் தோல்வியடைந்துள்ளார்.

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் லண்டனில் நடைபெற்று வருகின்றது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவியுள்ளார்.

அத்துடன் டெனிஸ் தரவரிசையில் 48-வது இடத்தில் உள்ள சு-வெய் ஹிசை 3-6, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் 2 மணி 20 நிமிடங்கள் போராடி வெற்றி பெற்றார்.

32 வயதான சீன நாட்டு வீராங்கனையான சு-வெய் விம்பிள்டனில் போட்டிகளில் முதல் முறையாக 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply