Menu

காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சராக இனி முஸ்லீம் பதவியேற்க கூடாது…!!! சுவாமி அதிரடி கருத்து..!!

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சராக முஸ்லீம் தலைவர்கள் இனி பதவி ஏற்க கூடாது என பா.ஜ.க. மூத்த தலைவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்தியாவின் விடுதலைக்கு பின்னர் முஸ்லிம் தலைவர்கள் மட்மே முதலமைச்சர்களாக பதவி வகித்த வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டனி அரசுக்கு பாரதிய ஜனதா கட்சி வழங்கிவந்த ஆதரவை மீளப்பெற்ற பின்னர் தற்போது அங்கு ஆளுனரின் ஆட்சி நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சராக இனி முஸ்லிம்கள் இருக்க கூடாது என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடையம் தொடர்பாக இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே சுப்ரமணியன் சுவாமி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முஸ்லிம்களை முதலமைச்சர்களாக நியமிப்பது நேரு காலத்தில் திணிக்கப்பட்ட மரபு என்றும் சுப்ரமணியன் சுவாமி குற்றம் சுமத்தியுள்ளார்.

எனவே இவ்வாறான மரபை தற்போதும் கடைப்பிடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சுப்ரமணியன் சுவாமி சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply