Menu

இலங்கையில் தமிழனின் நிலை!!போராட்டத்தில் ஈடுபட்ட பச்ச பிஞ்சு..!!!

திருகோணமலை நிலாவெளிப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இலுப்பங்குளத்தில் கொலை செய்யப்பட்ட இராஜரத்தி­னம் சுரேஸின் சாவுக்கு காரணமான கொலையாளிகளைக் கைது செய்யக்கோரி கவனவீர்ப்புப் போராட்டம் நேற்று நடத்தப்பட்டது.

கொலை செய்யப்பட்ட சுரேஸின் மனைவி ஒரு மாதக் கைக்குழந்தையுடன் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

கடந்த மாதம் 28ஆம் திகதி சுரேஸ் இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இதுவரை கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை. இதனைக் கண்டித்து நேற்றுக் கவனவீர்ப்புப் போராட்டம் நிலாவெளியில் முன்னெடுக்கப்பட்டது.

சுரேஸ் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டார். சட்டவிரோத நட­வ­டிக்கை தொடர்பில் கண்டறிந்தமையினால் அவரைக் கொலை செய்துள்ளனர்.

இதுவரை கொலையாளிகளைப் பொலிஸார் கைது செய்யவில்லை. கொலையாளிகளை உடனே கைதுசெய்யவேண்டும்’ என்று போராட்டத்தில் கலந்துகொண்டோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon