Menu

இலங்கை இராணுவத்தின் கொடூரம்!! 147 பேரை காவு கொண்ட நவாலி படுகொலை!!!

இலங்கை வான் படையின் வானூர்தித் தாக்குதலில் ஒரே தடவையில் 147 பேரைக் காவு கொண்ட நவாலிப் படுகொலையின் 23ஆவது நினைவு நாள் இன்றாகும்.

1995ஆம் ஆண்டு இதே நாளில், ‘லீப்டோர் வேர்ட்’ என்ற முன்னோக்கிப் பாய்தல் இராணுவ நடவடிக்கையினால், நவாலியில் மக்கள் ஏதிலிகளாக தஞ்சமடைந்திருந்தனர்.

இலங்கை வான்படையின் வானூர்தி 13 குண்டுகளைத் தொடர்ச்சியாக அந்த மக்கள் மீதும், அவர்கள் தஞ்சமடைந்திருந்த ஆலயங்கள் மீதும் வீசியது.

வான்படையின் ஈவு இரக்கமற்ற இந்தக் குண்டுவீச்சில், சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள், பணியாளர்கள் எனப் பலரும் துடி துடித்து நொடிப் பொழுதில் சாவைத் தழுவிய கொடூரம் அரங்கேறியது.

இந்தத் தாக்குதலில் சாவைத் தழுவியோர் நினைவாக, நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும், நவாலி சின்னக் கதிர்காமம் முருகன் ஆலயத்திலும் இன்று சிறப்புப் பூசை வழிபாடுகள் நடைபெறவுள்ளன.

நாளையதினம் மகிந்த பாராளுமன்றில் விசேட உரை

நாளையதினம் பாராளுமன்றில் பிரதமர் மகிந்த...

Leave a Reply

Right Menu Icon