Menu

நாட்டின் பாரம்பரிய கோட்பாடுகள் குறித்து கருத்து தெரிவிப்பவர்கள் தங்களின் கருத்துக்களையும் சுயபரிசோதனை செய்யவேண்டும்…!!!!

பாராளுமன்றத்துக்கு வெடிகுண்டு வீசுவதாக கருத்து வெளியிட்டவர்கள் இன்று பாராளுமன்றத்தினதும் நாட்டின் பாரம்பரிய கோட்பாடுகள் குறித்தும் கருத்து வெளியிடுவது வேடிக்கையாகவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் கல்வி அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜகலா மகேஸ்வரன் தேசிய பாதுகாப்பு மற்றும் பாராளுமன்றத்தின் கோட்பாடுகளை மீறினார் என்ற விடயங்களை முன்னிலைப்படுத்தி எதிர்தரப்பினர் அரசியல் இலாபம் தேடிக் கொள்வதாகவும் அகிலவிராஜ் காரியவசம் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன் கடந்த காலங்களில் பாராளுமன்றத்தின் செங்கோலை உடைக்க முற்பட்டவர்களும் சபாநாயகரை அவமதித்து பேசியவர்களும் தற்போது நாட்டின் பாரம்பரிய குறித்து கருத்து தெரிவிப்பதாகவும் அகிலவிராஜ் காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் தற்போது இவர்கள் கடந்து வந்த பாதையை மறந்து பிறிதொருவரின் விடயத்தை பகடைக்காயாக்கி தேசிய பாதுகாப்பு மற்றும் பாராளுமன்றத்தின் கோட்பாடுகள் தொடர்பில் கருத்துக்களை தெரிவித்து அரசியல் இலாபம் ஈட்ட முயற்சிப்பதாகவும் அகிலவிராஜ் காரியவசம் மேலும் தெரிவித்தள்ளார்.

Leave a Reply