Menu

மன்னார் சதொசா விற்பனை நிலைய வளாகத்தில் தோண்;ட தோண்ட மனித எச்சங்கள்

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள சதொசா விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூட்டுகளின் அகழ்வு பணிகள் இன்றுடன் 29 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 

மன்னார் நீதவான் ரி.ஜே.பிராபாகரன் மேற்பார்வையில், விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமை அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் அகழ்வு பணிகள் தற்போது தற்காலிகமாக குறைக்கப்பட்டுள்ளதுடன் ஏற்கனவே அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது கிடைக்க பெற்ற பகுதி அளவு மற்றும் முழு அளவிலான மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 

இன்றையதினம் முகப்பு பகுதியை மேலும் அகலப்படுத்தி ஆழப்படுத்தி மனித எச்சங்கள் காணப்படுகின்றனவா? என ஆராய்ந்து பார்த்த சிலையில்; மேலும் அதிகளவிலான சிதறிய மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது.

 

முகப்பு பகுதிகளில் தற்போது இன்னும் அதிகளவிலான மனித எச்சங்கள் காணப்படலாம் என சந்தோகம் ஏற்பட்டுள்ளது.

 

அதனை தொடர்ந்து முகப்பு பகுதியை மேலும் ஆழப்படுத்தி ஆகழ்வு செய்வதற்கான செயற்பாடுகள் இடம் பெற்று வருகின்றது.

குறித்த அகழ்வு பணிகளில் தற்போது மனித வள பற்றாக்குறை காணப்படுவதனால் மீட்பு மற்றும் அப்புறப்படுத்தல் பணி மிகவும் மந்த கதியில் இடம் பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon