Menu

வியட்நாமிற்கான உத்தியேகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பாம்பியோ தலைவர்களை சந்தித்து கலந்துரையாடல் !!!

வியட்நாம் நாட்டுக்கான உத்தியேகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் மைக் பாம்பியோஇ அங்கு உயர் மட்டத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பானது இன்று வியட்நாமின் தலைநகரான ஹநோயில் இடம்பெற்றுள்ளது.

வடகொரிய, மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கான விஜயத்தின் ஒரு பகுதியாகவே மைக் பாம்பியோ வியட்நாமிற்கு சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வியட்நாமின் வெளியுறவுத்துறை அமைச்சர் பாஹ்ம் மிக்ஹ் பின்ஹ் உடனான சந்திப்பிற்கு முன்னதாக மைக் பொம்பியோ வியட்நாம் பிரதமருடனான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார்.

இதன் போது இரு நாடுகளுக்கிடையிலான மூலோபாய தொடர்புகளை வலுப்படுத்தல், பிராந்திய பிரச்சினைகள் மற்றும் வடகொரியாவின் அணுவாயுதத் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

அத்துடன் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு மற்றும் போருக்கு பின்னரான நிவாரணங்கள் போன்றவற்றில் இரு நாடுகளுக்கிடையிலும் சிறந்த ஒத்துழைப்புகளை வளர்த்துக்கொள்ள தயாராக இருப்பதாகவும் வியட்நாமின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த இரண்டு தசாப்தங்களில் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகமானது 8 சதவீதமான வளர்ச்சியை கண்டுள்ளதாக அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவின் இராஜாங்க செயலாளராக மைக் பொம்பியோ பதவியேற்றதன் பின்னர் வியட்நாமிற்கான விஜயத்தினை முதல் முறையாக மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மங்குட் சூறாவளியில் பிலிப்பைன்ஸ் , சீனாவில் பொதுமக்கள் பலி

பிலிப்பைன்சில் 65 பேரைப் பலிகொண்ட மங்குட்...

Leave a Reply

Right Menu Icon