Menu

தவறுகளில் இருந்து கற்றுக்கொள்கிறேன் – ஹர்திக் பாண்டயா

தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வதாக இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பான்டயா தெரிவித்துள்ளார்.

 

இந்திய அணியின் மித வேகப்பந்து வீச்சாளர் ஹர்திக் பாண்ட்யா இங்கிலாந்திற்கு எதிரான 3வது மற்றும் இறுதி சர்வதேச டி20 போட்டியில் 38 ஓட்டங்கள், கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

இந்த போட்டியில் வெற்றி பெற்று 2-1 என்ற புள்ளி கணக்கில் தொடரை இந்தியா கைப்பற்றியது.

 

நேற்று நடந்த போட்டியில் துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட ஹர்திக் பாண்டயா செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டார்.

பந்து வீச்சில் வேறுபட்ட வகையில் பந்து வீசுவதிலேயே கவனம் செலுத்தி வருவதாகவும் ஒவ்வொரு போட்டியிலும் தனது தவறுகளில் இருந்து கற்று கொள்வதை உறுதி செய்து கொள்வதாக பாண்டயா தெரிவித்துள்ளார்.

தனது பந்து வீச்சில் முதல் ஓவரில் 22 ஓட்டங்கள், எடுக்கப்பட்ட தருணத்தினை தான் நினைவில் கொள்வதாகவும், இந்திய வீரர் ஹர்திக் பாண்டயா தெரிவித்துள்ளார்.

நாளையதினம் மகிந்த பாராளுமன்றில் விசேட உரை

நாளையதினம் பாராளுமன்றில் பிரதமர் மகிந்த...

Leave a Reply

Right Menu Icon