Menu

துருக்கியில் ரயில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானதில் 24 பேர் உயிரிழப்பு

துருக்கி நாட்டில் பயணிகள் ரயில், தடம் புரண்டதில், பலியானவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளதாக துருக்கியின், துணை பிரதமர் தெரிவித்துள்ளார்.

 

பல்கேரியா நாட்டின் கபிகுல் பகுதியில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு சென்ற பயணிகள் ரயிலில், 360-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

 

தெகிர்டாக் பகுதியில் வரும் போது பயணிகள் ரெயிலின் ஆறு பெட்டிகள் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

 

இந்த விபத்தில் ரெயிலில் பயணம் செய்த 10 பயணிகள் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகியிருந்தது.

 

இந்நிலையில், காயமடைந்தவர்களில் மேலும் சிலர் மரணம் அடைந்ததையடுத்து பலி எண்ணிக்கை தற்போது 24 ஆக உயர்ந்துள்ளது.

 

மேலும், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக துருக்கி நாட்டின் துணை பிரதமர், ரெகேப் அக்டக் இன்று தெரிவித்துள்ளார்.

 

ரயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு துருக்கி ஜனாதிபதி எர்டோகன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

Leave a Reply