Menu

வவுனியாவிலும் வாள்வெட்டு – எழுவர் காயம்

வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களில் காயமடைந்த நிலையில், ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் அப்பகுதியில் நின்றிருந்த இளைஞர்கள் மீது நடத்திய வாள்வெட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இதேவேளை, மதினா நகர் பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட மற்றுமொரு மோதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இதேபோன்று மேலும் சில பகுதிகளில் நடைபெற்ற தாக்குதல்களில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

தாண்டிக்குளம் சம்பவம் தொடர்பாக பூந்தோட்டம் மற்றும் பெரியார்குளம், தோணிக்கல் பகுதிகளை சேர்ந்த 10 இளைஞர்களை வவுனியா குற்றதடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன் அவர்களிடமிருந்து ஒரு வாள், கோடரி, கேபிள்கள் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் என்பனவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Right Menu Icon