Menu

பிரதி அமைச்சர் அங்கஜனின் பிறந்த தினத்தன்று முதியவர்களுடன் அலவலாவிய யாழ் இளைஞர்கள்

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கைதடி சாந்தி நிலையத்தில் (முதியோர் இல்லத்தில்) வாழும் முதியவர்களுக்கு அங்கஜன் இராமநாதனின் ஆதரவு இளைஞர் அணியினரால் சிற்றூண்டிகள் மற்றும் குளிர்பானமும் வழங்கப்பட்டதுடன் முதியவர்களுடன் யாழ் இளைஞர்கள் அலவலாவி மகிழ்ந்திருந்தனர்

 

 

நேற்றைய தினம் பிறந்த நாள் கண்ட விவசாய பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் சமூகவலைத்தங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுகொண்டிருக்க சமகாலத்தில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் இளைஞர் அணி மற்றும் பிரதி அமைச்சர் அங்கஜனின் உடன்பிறவா தம்பிகள் இணைந்து கைதடி சாந்தி முதியோர் இல்லத்தில் வயோதிபர்களுக்கு சிற்றூண்டிகள் மற்றும் குளிர்பானம் கொடுத்ததுடன் நீண்ட நேரம் முதியவர்களுடன் சிரித்து பேசி கதைத்து மகிழ்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

 

வேகமான உலகிலே உறவுகளுக்கிடையிலான நேரடி தொடர்பாடலும் உறவும் குறைந்துக்கொண்டு செல்கையில் முதியவர்கள் மதிக்கப்படாத போக்கு அதிகரிக்கும் நிலையில் விவசாய பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதனது ஆதரவு இளையோரின் நடவடிக்கையினால் நேற்றைய தினம் அகமகிழ்ந்து போனார்கள் சாந்தி நிலையத்தில் வாழும் முதியவர்கள்.

 

 

சிற்றூண்டிகள் மற்றும் குளிர்பானத்தினை கடந்து தம்முடன் இளைஞர்கள் இவ்வாறு மகிழ்ந்திருந்தமை தம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதாக முதியவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

பிள்ளைகள் மற்றும் உறவுகளால் கைவிடப்பட்ட சூழ்நிலையில் தமக்கான உணவு மற்றும் பராமரிப்பு போதிய அளவில் கிடைக்கின்ற போதும் அன்பாய் சிரித்து பேசி மகிழ்ந்திருக்க முடியாத மன இருக்கத்துடன் தாம் தினமும் மரணத்திற்காக காத்திருக்கும் நிலையில் தம்முடன் இவ்வாறு இளைஞர்கள் வந்து கதைத்தது மனநிறைவையும் ஒருவித மன அமைதியும் தந்துள்ளதாக முதியவர்கள் தெரிவித்துள்ளனர்.

 


வடக்கு மாகாணசபையில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற அங்கஜன் இராமநாதன் பின்னர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஏறத்தாழ 15 ஆயிரம் வாக்குகளை பெற்றதனையடுத்து சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியக்குழுவின் கொள்கை வகுப்பிற்கு இணங்க தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்ட்டிருந்தார்.

 

அபிவிருத்தியும் அரசியல் உரிமைக்கான சனநாயக போராட்டமும் சமகோட்டில் பயனிப்பது ஊடாகவே தமிழர்கள் தமக்கான இலக்கினை அடைய முடியும் என்ற அங்கஜன் இராமநாதனது அரசியல் கொள்கைக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அண்மையில் அவருக்கு விவசாய பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

 

அங்கஜன் இராமநாதன் தேசியப்பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்பட்ட போதும் நாடாளுமன்றத்தில் அவரது கன்னி உரையில் நாட்டில் புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு வின்… வின்… கோட்பாட்டின் ஊடாக தீர்த்துக்கொள்ள தெற்கின் ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும் என ஆணித்தரமாய் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply