Menu

இலங்கையில் தூக்குத் தண்டனையை நடைமுறை படுத்த ஜனாதிபதி ஆலோசனை.!!!

இலங்கையில் தூக்குத் தண்டனையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை நடத்தி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான குற்றவாளிகளுக்கு மாத்திரம் தூக்குத் தண்டனை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

போதைப்பொருள்ள கடத்தல் தொடர்பில் குற்றவாளிகள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள போதும், சிறைக்குள் இருந்த போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதனால் குறித்த குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்குவதன் மூலம் நாட்டில் தற்போது அதிகரித்து வரும் போதைப்பொருள் கடத்தலை நிறுத்த முடியும் என்று சமூக ஆர்வலர்கள் பலர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதற்கமைவாக இலங்கையில் தூக்குத் தண்டனையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றில் கொள்ளையர்கள் -சத்தியலிங்கம்

வீதிகளில் நின்று மிளகாய்தூள் வீசி நகைகளை...

Leave a Reply

Right Menu Icon