Menu

மொஹமட் ஷமியின் மனைவி எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சி…காணொளி !!

இந்திய கிரிக்கட் வீரர் மொஹமட் ஷமியின் மனைவி ஹசின் ஜஹான் மீண்டும் மாடலிங் துறைக்கு திரும்ப முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய கிரிக்கட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான மொஹமட் ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹான் , ஷமிக்கு பல பெண்களுடன் தகாத தொடர்பு உள்ளதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

அவரும், அவருடைய குடும்பத்தினரும் என்னை கடந்த 2 ஆண்டுகளாக கொடுமைப்படுத்தி வருகிறார்கள். என்னை கொலை செய்யக்கூட முயற்சி செய்தார்கள்’ என்பது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார்.

மேலும் மொஹமட் ஷமி ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதாகவும் ஹசின் ஜஹான் கூறி இருந்தார்.

இது குறித்த விசாரணைகள் நடைபெற்று வருகின்ற நிலையில், ஷமியும், ஹசினும் தற்போது பிரிந்து வாழ்கின்றனர்.

இந்நிலையில், மகளின் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு மீண்டும் மாடலிங் துறைக்கு செல்ல முடிவு செய்துள்ளதாக ஹசின் தெரிவித்துள்ளார்.

மாடலிங் துறையில் வாய்ப்புகளை அள்ளுவதற்காக, டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள மிகக் கவர்ச்சியான காணொளி ஒன்று, பல இளைஞர்களை சுண்டி இழுத்தாலும், மொஹமட் ஷமியின் ரசிகர்களுக்கு ஆத்திரத்தையே ஏற்படுத்தியுள்ளது

 

இங்கிலாந்திடம் டெஸ்ட்தொடரையும் இழந்தது இலங்கை அணி!

இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரை 1:3 என...

Leave a Reply

Right Menu Icon