Menu

தென்னாசியாவிலேயே அதிகளவானவர்கள் காணாமல்போன நாடு இலங்கை – சாலிய பீரிஸ்

காணாமல்போனவர்கள் தொடர்பான 13 ஆயிரம், கோப்புகளை முன்னைய தேசிய நல்லிணக்க ஒருங்கிணைப்பு அமைச்சு வழங்கியுள்ளது என சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

 

காணாமல்போனவர்கள் குறித்த ஆவணங்களை அலுவலகம் கோரியதை தொடர்ந்து பல கிராமசேவையாளர்கள் தங்களிடமிருந்த கோப்புகளை அமைச்சிடம் கையளித்துள்ளதாகவும் குறிப்பிட்ட சாலிய பீரிஸ் முன்னைய தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சிடமிருந்து 13,000 கோப்புகள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

இந்த கோப்புகளில் உள்ள விடயங்களை ஆராய்ந்து வருவதாகவும், கோப்பில் உள்ள சம்பவங்கள் குறித்து ஏற்கனவே தாமும் ஆராய்ந்துள்ளதாக காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

 

நாடு முழுவதிலும் 12 பிராந்திய அலுவலகங்களை அமைக்க எண்ணியுள்ளதாகவும் காணாமல்போனோர் அலுவலகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

 

அதில் 5 அலுவலகங்கள் வடக்கிலும் 3 அலுவலகங்கள் கிழக்கிலும் அமையவுள்ளதுடன், இதன் மூலம் தங்கள் விசாரணைகளை துரிதப்படுத்தமுடியும் எனவும் காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன், தென்னாசியாவிலேயே அதிகளவானவர்கள் காணாமல்போன நாடு இலங்கை என தெரிவித்துள்ள சாலியபீரிஸ் 1970 களில் சைப்பிரசில் 4000 பேர் காணாமல்போனமை குறித்து குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக 1990களில் அலுவலகமும் அமைக்கப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

 

எனினும் இந்த விசாரணைகள் இன்று வரை தொடர்கின்ற நிலையில்,இலங்கையின் விசாரணைகளும் நீண்ட காலம் நீடிக்கலாம் என காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

‘பெரியார் குத்து’ பாட்டுக்கு நடனம் ஆடிய சிம்பு !!

நடிகர் சிம்பு சிறந்த நடிகர் மட்டுமின்றி...

Leave a Reply